Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நைஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து: 32 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து: 32 பேர் உயிரிழப்பு
மீட்கப்பட்ட விமானப் பகுதிகள் / Source: Reuters

நைஜீரியா ஜனாதிபதி போலா டினுபு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்

பகிரவும் WhatsApp Facebook

நைஜீரியாவில் ராணுவ விமானம் விபத்துக்கு உள்ளானதில் 32 பேர் உயிரிழந்தனர். விபத்து நேரிட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நைஜீரியாவில் உள்ள பெனின் நகரிலிருந்து, லாகோஸ் நோக்கி அந்நாட்டின் ராணுவ விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானம் விபத்தில் சிக்கியதில் விமானத்தில் இருந்த 32 பேரும் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மீட்புப்படையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை தேடி வருகின்றனர். 


இதையடுத்து நைஜீரியா ஜனாதிபதி போலா டினுபு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இது தொடர்பாக விமானப்படை தலைமை தளபதி எனக்கு விளக்கம் அளித்துள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நேரிடாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு விமானப் படைக்கு உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி
தொழில் துறையை வழிநடத்த தெரியாத முதல்வர் விஜய்?: ஜிஎஸ்டி வருவாயை காரணம் காட்டும் நயினார்!
அடுத்த செய்தி
சீனாவுக்கு உளவுத் தகவல் அனுப்பிய அமெரிக்க பெண் கைது: சிக்கியது எப்படி?

தொடர்புடைய செய்திகள்